கள்ளக்குறிச்சி மாவட்டம்., விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் சின்னசேலம் ஒன்றியம் சார்பில் அதன் இளஞ் சிறுத்தை எழுச்சி பாசறை ஒன்றிய அமைப்பாளர் சிங்கரா வேல் தலைமையில் , ஆகத்து -17 தமிழர் எழுச்சி நாள் தேசிய தலைவர் எழுச்சி தமிழர் அவர்களின் பிறந்தநாள் விழாவை முன்னிட்டு நாகை செந்தமிழ்ச்செல்வன் அவர்களின் வெளிச்சம் புரட்சிகர கலைக்குழு ஒருங்கிணைக்கும், எழுச்சி தமிழர், ஒரு சகாப்தம், கலை பிராச்சார பயணம் நடன நிகழ்சியை மூங்கில் பாடி மாரியம்மன் கோவில் அருகில் கிராமத்து ஒலி நிறுவன தலைவர் சக்தி கிரி வி.சி.கட்சி கொடியசைத்து துவக்கி வைத்தார். இந்த கலை நிகழ்ச்சிக்கு முன்னிலையாளர்கள் சின்னசேலம் ஒன்றிய செயலாளர்கள் வழக்கறிஞர் பழனிசாமி, சக்திவேல், குபேந்திரன், முன்னிலை வகித்தார்கள் இதில் சிறப்பு அழைப்பாளராக இளஞ் சிறுத்தை எழுச்சி பாசறை மாவட்ட அமைப்பாளர் பிரபு, மற்றும் ஒன்றிய துணைச் செயலாளர் டாக்டர் வேல்முருகன்,தொகுதி துணைச் செயலாளர் கோவிந்தராஜ், ஒன்றிய துணைச் செயலாளர் மைக்கல், மற்றும் அனைத்து ஆசிரியர் கூட்டமைப்பு சின்னசேலம் வட்ட நிர்வாகிகள் ஆசிரியர்கள் குமார், கலியமூர்த்தி,சிவானந்தன், சரவணன், உள்ளிட்ட வி.சி.க கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டார்கள். மேலும் கலை நிகழ்ச்சியை பொது மக்கள் ஆர்வமுடன் கலந்து கொண்டு கலைநிகழ்ச்சியை கண்டு களித்தனர்,