சென்னையின் பல பகுதிகளில் அதிகாலை முதல் மழை பெய்கிறது. மயிலாப்பூர், மந்தைவெளியில் பலத்த மழை பெய்வதால் பள்ளி செல்லும் மாணவர்கள், அலுவலகம் செல்வோர் சிரமத்திற்கு ஆளாகினர். சென்னையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய வானிலை ஆய்வு யைம இயக்குநர் பாலச்சந்திரன், அடுத்த 24 மணிநேரத்தில் கடலோர மாவட்டங்களில் மிதமான மழை பெய்யும் என்றார்.
வளிமண்டல மேலடுக்கு சுழற்சி இலங்கைக்கு அருகே நிலை கொண்டுள்ளதால் தமிழக கடலோர மாவட்டங்களில் பரவலாக கனமழைக்கு வாய்ப்பு உள்ளது என்றும் சென்னை புறநகரில் இரு தினங்களுக்கு மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளதாகவும் தெரிவித்தார். வடகிழக்குப் பருவமழை அக்டோபர் 30 முதல் தீவிரமடைய வாய்ப்பு என்றும் வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் கூறியிருந்தார். அவர் சொன்னது போலவே அதிகாலை முதலே பலத்த மழை பெய்து வருகிறது.
Chennais real monsoon spells start from today. Heavy rain hit in Chennai.