#Monsoon Update!அடுத்த 2 நாட்களுக்கு மழை தொடரும்- வீடியோ

Oneindia Tamil 2017-11-03

Views 367

தென்மேற்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதியால் அடுத்த 2 நாட்களுக்கு தென்தமிழகத்தில் அநேக இடங்களிலும் வடதமிழகத்தில் கடலோர மாவட்டங்களிலும் மழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மைய இயக்குனர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். வடகிழக்குப் பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் இன்று தமிழகத்தின் பல பகுதிகளில் வெயில் தலை காட்டினாலும் அடுத்தது மழை எப்போது தொடங்குமோ என்று மக்கள் வானிலை மைய அறிவிப்பை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். சென்னையில் இன்று காலை முத்ல் வெயில் சுள்ளென்று அடித்து வருவதால் மக்கள் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பி வருகின்றனர். சென்னை புறநகர்ப் பகுதிகளில் மழைநீர் தேங்கியுள்ளதால் மக்கள் அவதிக்கு ஆளாகியுள்ளனர். மேலும் நேற்று நெல்லை மாவட்டத்தில் அதிகபட்ச அளவு மழை பெய்ததால் குடியிருப்புப் பகுதிகள் மற்றும் கடைகளில் மழைநீர் புகுந்துள்ளது.

Chennai Metrology prediccts for the next 48 hours south Tamilnadu and sea shores in North tamilnadu may get shower and also says that a low depression formed in bay of bengal.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS