திமுக தலைவர் கருணாநிதியை பாமக நிறுவனர் டாக்டர் ராமதாஸ் நேரில் சென்று சந்தித்தைத் தொடர்ந்து இரு கட்சிகளிடையே கூட்டணி உருவாகுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. முதுமையாலும் உடல்நலம் பாதிப்பாலும் தீவிர அரசியலில் இருந்து ஒதுங்கி இருக்கிறார் கருணாநிதி. ராமதாஸும் அன்புமணியும் திராவிட கட்சிகளுக்கு மாற்று பாமகதான் என முழக்கமிட்டு வருகின்றனர்.
இந்நிலையில் கருணாநிதியை கோபாலபுரம் இல்லத்தில் ராமதாஸ் திடீரென சந்தித்து பேசினார். இச்சந்திப்பைத் தொடர்ந்து திமுக- பாமக கூட்டணி உருவாகுமா? என்ற விவாதம் எழுந்துள்ளது
திமுக தலைமையைப் பொறுத்தவரையில் பாமகவையும் கூட்டணியில் சேர்க்கலாம் என்றே நினைக்கிறது. இதற்காகத்தான் கருணாநிதியுடனான ராமதாஸ் சந்திப்புக்கும் ஓகே சொல்லப்பட்டதாம்.
களநிலவரத்தை அறிந்த திமுக மூத்த தலைவர்களோ, பாமகவுக்கு செல்வாக்கு எதுவும் இல்லை; அந்த கட்சியுடன் கூட்டணி வைத்த நாமும் வெல்லவில்லை; அதிமுகவும் வெல்லவில்லை; பாமகவின் வாக்குகள் நமக்கு ஒருபோதும் விழுவதும் இல்லை; அதனால் அக்கட்சியுடனான கூட்டணி முடிவை தவிர்த்து விடுங்கள் என மேலிடத்திடம் வலியுறுத்துகின்றனராம்.
According to the sources DMK Senior leaders strongly opposed to PMK for alliance.