ஜெயா டிவி சிஇஓ விவேக் வீட்டின் தண்ணீர் தொட்டியையும் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை செய்தனர். சசிகலாவின் குடும்பத்தினர் மற்றும் அவர்களுக்கு சொந்தமான நிறுவனங்களிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் இன்று காலை முதல் சோதனை நடத்தி வருகின்றனர். ஜெயா டிவி, நமது எம்ஜிஆர் மற்றும் சசிகலா குடும்பத்திற்கு சொந்தமான மிடாஸ் மதுபான ஆலையில் சோதனை நடைபெற்று வருகிறது. வரி ஏய்ப்பு மற்றும் கறுப்புப்பண ஒழிப்புக்காக இந்த சோதனை நடைபெறுவதாக வருமான வரித்துறையினர் தெரிவித்துள்ளனர். சசிகலாவுக்கு தொடர்புடைய 190 இடங்களில் சோதனை நடைபெற்று வருகிறது.
ஜெயா டிவியின் சிஇஓவான விவேக் வீட்டிலும் வருமான வரித்துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தி வருகின்றனர். சென்னை கோடம்பாக்கம் மகாலிங்கப்புரத்தில் உள்ள விவேக்கின் வீட்டிற்கு காலை 5.30 மணிக்கு வருமான வரித்துறை அதிகாரிகள் சென்றுள்ளனர்.
அதிகாரிகள் ஒவ்வொரு அறையாக சோதனை செய்து வருகின்றனர். வங்கிக் கணக்கு மற்றும் பணப்பரிவர்த்தனைகள் குறித்தும் அதிகாரிகள் ஆய்வு நடத்தி வருகின்றனர்.