தோனிக்கு எதிராக போர்க்கொடி பிடிக்கும் முன்னாள் வீரர்கள்- வீடியோ

Oneindia Tamil 2017-11-10

Views 8K

கடந்த சில வாரங்களாக கிரிக்கெட் உலகின் பேசு பொருளாக இருப்பது டோணி மட்டும் தான். அவர் உண்மையாகவே சரியான உடல் தகுதியோடுதான் இருக்கிறாரா என வரிசையாக கேள்வி எழுப்பிக் கொண்டு இருக்கின்றனர்.
இந்திய அணியை முன்பு தாங்கி பிடித்த பல முன்னாள் வீரர்கள் தற்போது டோணிக்கு எதிராக கொடி பிடித்துக் கொண்டு இருக்கிறார்கள். டோணி எப்போது சறுக்குவார் கீழே பிடித்து இழுக்கலாம் என பல கைகள் காத்துக் கொண்டு இருக்கிறது.இந்த நிலையில் தற்போது டோணி டி-20 போட்டிகளில் இருந்து விடைபெற வேண்டும் என முன்னாள் வீரர்கள் தெரிவிக்க தொடங்கி இருக்கின்றனர். தினமும் ஒரு முன்னாள் வீரர் என கணக்கு வைத்து பேட்டி கொடுத்துக் கொண்டு இருக்கின்றனர்.இந்திய அணியின் கேப்டனாக டோணி பதவியேற்றவுடன் அணியில் கொஞ்சம் கொஞ்சமாக சீனியர் பிளேயர்கள் கழட்டிவிடப்பட்டனர். டோணி தன்னுடைய பேச்சை கேட்கும் திறமையான வீரர்களை தேடி தேடி பிடித்து அணியில் சேர்த்தார். சேவாக், கம்பிர், லக்ஷ்மன், ஹர்பஜன், சாகிர் கான் என ஒரே செட் அப்படியே அணியைவிட்டு சென்றது. பொதுவாக புதிதாக அணியில் கேப்டனாக மாறும் எல்லோரும் செய்யக்கூடிய செயலைத்தான் டோணி செய்தார். இப்போது ரெய்னா, அஸ்வினை வீட்டுக்கு அனுப்பிவிட்டு கோஹ்லியும் அதைத்தான் செய்கிறார். ஆனால் டோணி அப்போது செய்தது இப்போது அவருக்கு பிரச்சனை ஆகி இருக்கிறது.டோணிக்கு எதிராக முதலில் கருத்து சொன்னது விவிஎஸ் லக்ஷ்மன் தான். இவர் தான் கடந்த நியூசிலாந்துக்கு எதிரான தொடரில் டோணி விளையாட கூடாது என்றார். மேலும் இரண்டாவது போட்டியில் இந்தியா தோற்ற போது, அந்த போட்டியில் ஒழுங்காக ஆடி இருந்தாலும் டோணியை குறை சொன்னார். மேலும் அவர் ஒரு பேட்டியில் ''டோணிக்கு நேரம் வந்துவிட்டது. அவர் இனி இளைஞர்களுக்கு வழிவிட வேண்டும்'' என்று கூறினார்.


Former Indian team players are messing with Dhoni. They says Dhoni should retire from all form of cricket or atleast T20.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS