முக்கியமான வீரர்கள் பலர் பங்கேற்கும் டி-10 கிரிக்கெட் லீக் தற்போது தொடங்கி இருக்கிறது. இதற்கான தொடக்க விழா நேற்று ஷார்ஜாவில் நடைபெற்றது. இந்த டி-10 கிரிக்கெட் லீக் தொடரில் நிறைய சுவாரசியமான சம்பவங்கள் நிரம்பி இருக்கிறது. முன்னாள் வீரர்கள் பலர் இந்த போட்டிக்காக மீண்டும் கிரிக்கெட் விளையாட களம் இறங்குகின்றனர். நேற்று இந்த போட்டிக்கான துவக்க விழா நடைபெற்றது. இந்த வார இறுதி வரை போட்டிகள் நடைபெறும். இதற்கு மக்கள் தரும் ஆதரவை வைத்து எதிர்காலத்தில் நீண்ட தொடராக நடத்தப்படும் என்று கூறப்படுகிறது.
தற்போது கிரிக்கெட் உலகில் டி-20 போட்டிகள் மிகவும் பிரபலமாக இருக்கிறது. டி-20 போட்டிகள் வந்த பின் மொத்த கிரிக்கெட் உலகமே மாறியிருக்கிறது. இந்த நிலையில் தற்போது இதில் இன்னும் சில மாற்றங்கள் கொண்டு வரும் வகையில் டி-10 போட்டிகள் நடக்க இருக்கிறது. டி-10 கிரிக்கெட் லீக் தொடர் தற்போது ஐக்கிய அரபு நாடுகளின் சார்ஜாவில் தொடங்கி உள்ளது. இந்த போட்டிகள் டிசம்பர் மாதம் 17ம் தேதி வரை நடைபெறும்.
First T10 cricket league is goind to held in Sharjah, United Arab Emirates. The match will played from December 14 to 17. Punjabi Legends, Bengal Tigers, Maratha Arabians,Kerala Kings, Pakhtoons, Colombo Lions, will participate in this series.