சசிகலா, டிடிவி தினகரன் உறவினர்கள் வீடுகளில் வருமான வரி சோதனை நீடித்து வருகிறது. ரெய்டு நடந்தாலும் பயப்பட மாட்டோம் என்று கூறிக்கொண்டே செஞ்சி அருகே உள்ள பிரத்தியங்கிரா தேவியை வழிபட்டு திரும்பியுள்ளார் டிடிவி தினகரன். கடந்த வியாழக்கிழமை முதல் வருமானவரித்துறை அதிகாரிகள் சசிகலா குடும்பத்தார் மற்றும் அவரது உறவினர்கள், நண்பர்களில் தொடர் சோதனை மேற்கொண்டுள்ளனர். இந்த ரெய்டுக்கு எங்க வீட்டில் உள்ள பச்சைப்புள்ள முதல் வயதான எங்க அப்பா வரை யாரும் பயப்பட மாட்டோம் என்று தில்லு துரையாக பேட்டி தருகிறார் டிடிவி தினகரன்.எங்கெங்கோ ரெய்டு நடக்கிறது என் வீட்டில் ரெய்டு நடக்கவேயில்லை. நான் பூஜை செய்கிறேன் என்று கோ பூஜை செய்து விட்டு பேட்டி கொடுத்தார் தினகரன். தன்னுடைய பண்ணை வீட்டில் சாணியும், உரமும்தான் கிடைக்கும் என்றார்.
TTV Dinakaran offer prayer for Prathyangira Devi temple near Tiruvannamalai district.