அணையின் பாதுகாப்பு உறுதி தன்மை குறித்து மத்திய நீர்வள ஆணையக்குழுவினர் ஆய்வு செய்தனர்.
முல்லை பெரியாறு அணையின் நீர்மட்டத்தை 142 அடியாக உயர்திடவும், அதற்காக மத்திய நீர்வளத்துறை அணையம் சார்பில் குழு ஒன்றை அமைத்து தொடர்ந்து கண்காணிக்கவும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டது. இதையடுத்து மத்திய நீர்வளத்துறை சார்பில் குழுவும் அமைக்கப்பட்டு அக்குழு அவ்வப்போது ஆய்வும் செய்து வருகிறது. இந்நிலையில் நேற்று அணையின் நீர்மட்டம் பருவ மழை காலத்தில் அணையில் செய்யப்பட வேண்டிய முன்எச்சரிக்கை நடவடிக்கை, அணை பாதுகாப்பு, அணையின் உறுதி தன்மை குறித்து ஆய்வு மேற்கொண்டது. இந்த ஆய்வில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகளும் கேரளா மற்றும் தமிழகத்தை சேர்ந்த அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.
Dis : The Central Water Commission Commission reviewed the safety of the dam