நித்திய கண்டம் பூரண ஆயுசு என்பார்கள். ஆனால் அதிமுக ஆட்சிக்கு மணிக்கு மணி கண்டமாகவே இருக்கிறது. இன்னும் சில தினங்களில் தமிழகத்தில் ஆட்சி மாற்றம் வரலாம் என்று அரசியல் பட்சிகள் கூவுகின்றன. எதிர்கட்சியினரும் இதையேத்தான் சொல்லி வருகிறார்கள். இது உண்மைதான் என்று உணர்த்தும் வகையில் ஆளுநரும் தனது ஆய்வை தொடங்கி விட்டார். ஆளுநருக்கு உதவி செய்ய இரண்டு ஐஏஎஸ் அதிகாரிகள் நியமிக்கப்பட உள்ளனர். இதன் மூலம் தமிழகத்தில் ஆட்சி கலைக்கப்பட்டு ஆளுநர் ஆட்சி வரப்போவது உறுதி என்று வாட்ஸ் அப் தகவல்கள் உலா வருகின்றன.
அமைச்சரவையில் உள்ள பலரின் சொத்துகள் உள்ளிட்ட அனைத்து விபரங்களும் ஆளுநர் வசம் உள்ளது. இவர்களில் சிலர் மீது ஊழல் வழக்கு பாயலாம் என்றும் பரபரப்பாக கூறப்படுகிறது.
பிரதமர் அலுவலகத்தில் பணியாற்றிய ஐ.ஏ.எஸ் அதிகாரி டி.வி. சோமநாதன் இல்லத் திருமணத்தில் மோடி பங்கேற்றார். அந்த சோமநாதன் ஐஏஎஸ்தான் ஆளுநரின் உதவியாளராகப் போவதாக கூறப்படுகிறது. அதேபோல், மத்திய அரசில் பணியாற்றிய ராஜகோபால் ஐ.ஏ.எஸ் தமிழ்நாட்டு பணிக்கு திரும்பியுள்ளார்.
According to a whatsapp message very soon many political leaders will be arrested in Tamil Nadu