2ஜி வழக்கில் இன்று சிபிஐ கோர்ட் தீர்ப்பளித்துள்ளது. குற்றம் சாட்டப்பட்ட அனைவரையும் கோர்ட் விடுவித்துள்ளது. இந்த நிலையில் இந்தியாவை உலுக்கிய பல ஊழல் புகார்கள் குறித்த ஒரு பார்வை.
சர்வதேச அளவில் இந்தியா பல இடங்களில் முதலிடத்தில் இருந்தாலும் அதற்கு நேர்மாறாக பல வெட்கப்பட வேண்டிய விஷயங்களிலும் நம் நாடு முதலிடத்தில் இருக்கிறது. எய்ட்ஸ், சுகாதாராமின்மை, மதக்கலவரங்கள் என்று இந்த நீண்ட பட்டியலில் ஊழலிலும் நாம் உலகளவில் கொடிக்கட்டி பறந்து வருகிறோம்.அறிவியலும், விஞ்ஞானமும் வளர்ந்து வரும் நிலையில் இந்தியாவில் ஊழலும், முறைகேடுகளும், லஞ்சமும் பெருகிக்கொண்டு வருகிறது. இந்த வரிசையில் உலகத்தையே உலுக்கிய இந்தியாவில் நடைபெற்ற பல லட்சம் கோடி மதிப்புள்ள ஊழல் வழக்குகள் குறித்து பார்க்கலாம். பின் வரும் வழக்குகள் அனைத்தும் லட்சம் கோடிகளை தாண்டிய ஊழல் வழக்குகள் என்பதாலோ என்னவோ நீதித்துறை அதனை பல ஆண்டுகளாக விசாரித்து வருகிறது.மன்மோகன் சிங் ஆட்சி காலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய இந்த வழக்கில் ஜார்க்கண்ட் முன்னாள் முதலமைச்சர் மதுகோடா மற்றும் அம்மாநில அரசு அதிகாரிகளுக்கு மூன்றாண்டு சிறை தண்டனை விதித்து டெல்லி சிறப்பு சிபிஐ நீதிமன்றம் தீர்ப்பளித்தது. அவர்கள் மேல்முறையீடு செய்ய ஏதுவாக 2 மாத கால அவகாசத்தையும் நீதிபதிகள் வழங்கியது குறிப்பிடத்தக்கது.
உலக அளவில் பரபரப்பை ஏற்படுத்தியது 2ஜி வழக்கு என்றால் அது மிகையாகாது. உலக நாடுகள் மட்டுமின்றி, ஊடகங்கள் மற்றும் பத்திரிக்கைகளின் புண்ணியத்தில் இந்த வழக்கு இந்தியாவின் பட்டித்தொட்டி என்றும் பிரபலமாகின. 2ஜி அலைக்கற்றை ஏலத்தில் அரசுக்கு 1.76லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டதாக மத்திய கணக்கு தணிக்கை அதிகாரியின் அறிக்கையால் இந்த வழக்கு வெளியே வந்தது. இந்த வழக்கில் முன்னாள் மத்திய அமைச்சர் ஆ.ராசா, எம்.பி.கனிமொழி ஆகியோர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டு ஜாமீனில் வெளிவந்தது குறிப்பிடத்தக்கது. இந்த வழக்கின் இறுதி விசாரணையில் குற்றஞ்சாட்டப்பட்ட ஆ.ராசா, எம்.பி. கனிமொழி உள்ளிட்ட 14 பேரும் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
India’s top corruption scam cases which shook the world. These are the cases which are related to some thousand crores to multi lakh crores. In these case some have been convicted and some has been released based on their political agenda.