சென்னை போயஸ் கார்டனில் ஜெயலலிதா வசித்த வீட்டில் அவரது ஆருயிர்த் தோழி சசிகலாவுக்கு 4 அறைகள் இருந்தது தெரிய வந்துள்ளது. சசிகலாவின் உறவினர்கள் வீடுகளில் கடந்த வாரம் வருமான வரித் துறை அதிகாரிகள் ரெய்டு நடத்தினர். இதைத் தொடர்ந்து சசிகலா தங்கியிருந்த போயஸ் கார்டன் இல்லத்தில் சோதனை நடைபெற்றது. இந்த ரெய்டு குறித்து வருமான வரித்துறையினர் விளக்கம் அளித்துள்ளனர். அதில் போயஸ் கார்டனில் சசிகலாவின் 4 அறைகளிலும் சோதனை நடைபெற்றதாக அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த செய்தியை கேட்டதுமே நமக்கு பரப்பன அக்ரஹாரா சிறையில் சசிகலாவுக்கு கிடைத்த சொகுசுகள்தான் நினைவுக்கு வருகின்றன.
சொத்துக் குவிப்பு வழக்கில் நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதி செய்ததால் கடந்த பிப்ரவரி 14-ஆம் தேதி சசிகலா, இளவரசி, சுதாகரன் உள்ளிட்டோர் பெங்களூர் பரப்பன அக்ரஹார சிறையில் அடைக்கப்பட்டனர். இவர்களுக்கு 4 ஆண்டுகளுக்கு தண்டனை விதிக்கப்பட்டுள்ளது.
சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளராக தேர்வு செய்யப்பட்டிருந்ததால் அவருக்கு சிறையில் சில சலுகைகள் வழங்கப்பட்டது. அதாவது டிவி, சேர்கள், பேன், கட்டில் உள்ளிட்டவைகளாகும்.
There were 4 rooms for Sasikala in Poes Garden. Likewise 4 rooms alloted for her in Parappana Agrahara prison.