அதிமுகவின் இரட்டை இலை சின்னம் தொடர்பான வழக்கில் இந்திய தேர்தல் ஆணையம் இன்று தீர்ப்பளிக்கக் கூடும் என தகவல் வெளியாகியுள்ளது. அதிமுகவில் ஓபிஎஸ் முதலில் கலகக் குரல் எழுப்பி இரட்டை இலை சின்னத்துக்கு உரிமை கோரினார். ஆர்.கே. நகர் தேர்தலின் போது இரட்டை இலை சின்னம், கட்சி, கொடி முடக்கப்பட்டது. பிப்ரவரி மாதம் பிரிந்த அணிகள் ஆகஸ்ட் மாதம் அமாவாசையில் ஓபிஎஸ்- ஈபிஎஸ் அணிகள் இணைந்தன. உண்மையான அதிமுக தாங்கள்தான் என்றும் தங்களுக்கே இரட்டை இலை சின்னத்தை ஒதுக்க வேண்டும் என தேர்தல் ஆணையத்தில் வாதிட்டனர். இதற்கு முட்டுக்கட்டை போடும் விதமாக டிடிவி தினகரன் அணியினர் இரட்டை இலை சின்னத்திற்கு உரிமை கோரினர்.
பிரமாணப்பத்திரங்களை தாக்கல் செய்த நிலையில் கடந்த மாதம் 6ஆம் தேதி முதல் தேர்தல் ஆணையம் இரு அணிகளிடமும் விசாரணை நடத்தியது. 7 கட்டமாக நடந்த விசாரணையில் இரு அணிகளைச் சேர்ந்த வழக்கறிஞர்களும் தங்கள் தரப்பு வாதங்களை முன் வைத்துள்ளனர். நிறைவு பெற்ற நிலையில் தீர்ப்பு தேதி குறிப்பிடப்படமால் ஒத்தி வைக்கப்பட்டிருக்கிறது.
Sources said that the Election Commission will deliver the verdict today the AIADMK's two leaves symbol case