இரட்டை இலை சின்னம் யாருக்கு? என்ற கேள்வியுடன் காத்திருக்கும் அதிமுகவினர் ஆவலோடு எதிர்பார்க்கும் இறுதி தீர்ப்பை தேர்தல் ஆணையம் இன்று வெளியிடலாம் என்று தகவல் வெளியாகியுள்ளது. ஜெயலலிதாவின் மறைவுக்குப்பிறகு, ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் அதிமுக அம்மா அணி சார்பில் டிடிவி தினகரன் போட்டியிட்டார். அதிமுக புரட்சித்தலைவி அம்மா அணியின் சார்பில் மதுசூதனன் போட்டியிட்டார். இரு பிரிவினரும் மாற்றி மாற்றி குற்றச்சாட்டுகளை முன்வைத்ததால், இரட்டை இலை சின்னத்தை தேர்தல் ஆணையம் முடக்கியது. இது தொடர்பாக இரு அணிகளைச் சேர்ந்தவர்கள் நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்தனர். அதேபோல், தேர்தல் ஆணையத்திலும் லாரிகள் கொண்டு செல்லும் அளவுக்கு பிரமாணபத்திரங்களை தாக்கல் செய்தனர். பல மாதங்களாக விசாரணை நடத்திய தேர்தல் ஆணைய அதிகாரிகள். இன்று இறுதி அறிவிப்பை வெளியிடுவார்கள் என்று தகவல் வெளியாகவுள்ளது.
Election comission of India may announce the final judgement today for whoom the ADMK party name and two leaves symbol either to Edappadu Palanisamy faction or Sasikala faction.