அன்பு அண்ணன் நல்லவர், அவரை பற்றி மத்தவங்க சொல்வது எல்லாம் சுத்த பொய் என இயக்குனரும், நடிகருமான சுந்தர் சி. தெரவித்துள்ளார். பைனான்ஸியர் அன்புச்செழியனின் தொல்லை தாங்க முடியவில்லை என்று கடிதம் எழுதி வைத்துவிட்டு தயாரிப்பாளர் அசோக் குமார் தற்கொலை செய்து கொண்டார். இந்நிலையில் அன்புச்செழியன் குறித்து இயக்குனர் சுந்தர் சி. கூறியிருப்பதாவது,
கடந்த 8 ஆண்டுகளாக என் தயாரிப்புகளுக்கு எல்லாம் அன்பு அண்ணனிடம் தான் பணம் வாங்கிக் கொண்டிருக்கிறேன். வருகிற நியூஸ் எல்லாம் பார்க்கும் போது எனக்கு ஆச்சரியமாக இருக்கிறது. அவர் அதை எழுது வாங்கிவிட்டார், இதை எழுதி வாங்கிவிட்டார்னு.
உண்மையை சொல்லப் போனால் என்கிட்ட அது மாதிரி எதுவுமே கிடையாது. நான் பண்ணிக் கொண்டிருக்கிற கலகலப்பு 2க்கு கூட அன்பு அண்ணன் தான் பைனான்ஸ் பண்ணியிருக்கிறார்.
Director cum actor Sundar C. said that financier Anu Chezhiyan is a very understanding and good man. He added that one can even call him in the middle of the night asking money for movies. Anbu has given money for Sundar C.'s upcoming movie Kalakalappu 2.