கலகலப்பு 2 படப்பிடிப்பை முடித்துவிட்டார் இயக்குனர் சுந்தர் சி.
சுந்தர் சி. இயக்கத்தில் விமல், மிர்ச்சி சிவா, அஞ்சலி, ஓவியா நடித்த கலகலப்பு படத்தின் 2ம் பாகம் அறிவிக்கப்பட்டது. ஜீவா, ஜெய், மிர்ச்சி சிவா, நிக்கி கல்ராணி, கேத்ரீன் தெரஸா உள்ளிட்டோரை வைத்து கலகலப்பு 2 படத்தின் படப்பிடிப்பை கடந்த அக்டோபர் மாதம் 4ம் தேதி துவங்கினார் சுந்தர் சி. காரைக்குடியில் படப்பிடிப்பை துவங்கி பின்னர் காசிக்கு சென்றனர். இந்நிலையில் படப்பிடிப்பு முடிந்துவிட்டது என்று படக்குழு தெரிவித்துள்ளது. பரபரவென வேலை பார்த்துள்ளார் சுந்தர் சி.
சுந்தர் சி.யை பார்த்து 55 நாட்களாகிவிட்டது திருமண விசேஷம் வந்ததால் அவரை பார்க்க முடிந்தது என்று அவரின் மனைவியும், நடிகையுமான குஷ்பு தெரிவித்திருந்தார். கலகலப்பு 2 படத்தை ஜனவரி மாதம் ரிலீஸ் செய்ய திட்டமிட்டுள்ளார் சுந்தர் சி.
Director Sundar C. has completed the shooting of his latest outing Kalakalappu 2. Actor Jiiva tweeted that, 'It’s a wrap #Kalakalappu2Rollarcoaster laugh riot experience Thanks for the lovely time #directorsundar.c Actor_Jai actorshiva khushsundar'. Kalakalappu 2 is set to hit the screens in January 2018.