எஸ்.ஏ. சந்திரசேகர் வீடியோவை போட்டு எச். ராஜா சீண்டல்!

Oneindia Tamil 2017-11-25

Views 1

இயக்குனர் எஸ்.ஏ. சந்திரசேகர் திருப்பதியில் காணிக்கை செலுத்துவது குறித்து பேசிய வீடியோ பதிவை போட்டு பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா கிறித்தவ மதமாற்றும சக்திகளின் கோரமுகம் இதோ என்று பதிவிட்டுள்ள கருத்து சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மெர்சல் பட விவகாரத்தில் நடிகர் விஜயை ஜோசப் விஜய் என்று போட்டு அவரின் உண்மையான அடையாளம் இது தான் என்று கருத்து பதிவிட்டிருந்தார் பாஜக தேசிய செயலாளர் எச். ராஜா. இதற்கு நடிகர் விஜயின் தந்தையும் இயக்குனருமான சந்திரசேகர் பதிலடி தரும் விதமாக மதத்தை வைத்து ஒருவரை அடையாளப்படுத்துவது சிறுபிள்ளைத் தனமானது என்று கூறி இருந்தார். ஜாதி, மதத்திற்கு அப்பாற்பட்டு நடிகர் விஜய் சிறந்த மனிதராகவே இருக்கிறார் என்றும் எஸ்.ஏ.சந்திரசேகர் தெரிவித்திருந்தார். மேலும் நடிகர் விஜய்யும் மெர்சல் பட வெற்றிக்கு நன்றி தெரிவித்து வெளியிட்ட அறிக்கையிலும் கூட ஜோசப் விஜய் என்றே குறிப்பிட்டு எச். ராஜாவின் குற்றச்சாட்டுகளுக்கு முற்றுப்புள்ளி வைத்தார்.இந்நிலையில் எஸ்.ஏ.சந்திரசேகர் நிகழ்ச்சி ஒன்றில் பேசிய வீடியோவை எச். ராஜா தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் வெளியிட்டுள்ளார். அந்த வீடியோவில் எஸ்.ஏ.சந்திரசேகர் உண்டியலில் காசு போட்டால் பாஸ் ஆகிவிடலாம் என்றால் யாருமே பள்ளிக்குச் செல்ல வேண்டாமே.

உண்டியலில் காசு போட்டுவிட்டு வீட்டிலேயே இருந்து கொள்ளலாம். உழைக்க வேண்டும், நல்லது செய்ய வேண்டும், நல்லதையே பேச வேண்டும். மனதில் எதையும் மறைத்து வைத்து பேசாதீர்கள் என்றும் அவர் அதில் குறிப்பிடுகிறார்.





BJP National secretary H.Raja raises another controversy over the video of Director S.A.Chandrasekar, as he is speaking about putting money at Hundiyals rather studying.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS