ரஸ்னா விளம்பரத்தில் நடிச்ச குட்டிப் பொண்ணு இப்போ அம்மாவாகிட்டாங்க!- வீடியோ

Filmibeat Tamil 2017-12-01

Views 1

'லண்டன்' படத்தில் பிரசாந்துக்கு ஜோடியாக நடித்த நடிகை அங்கிதா ஜவேரி தற்போது ஒரு ஆண் குழந்தைக்கு தாயாகியுள்ளார். 'ரஸ்னா' குளிர்பான விளம்பரத்தில் குழந்தை நட்சத்திரமாக நடித்ததன் மூலம் புகழ்பெற்றவர் அங்கிதா. பலருக்கும் அந்த நாஸ்டால்ஜிக் விளம்பரம் நினைவிருக்கலாம். வளர்ந்த பின், தமிழ், கன்னடம், தெலுங்கு ஆகிய மொழிகளில் நடித்திருக்கிறார் அங்கிதா. சில ஆண்டுகளுக்கு முன்பு தொழிலதிபரை திருமணம் செய்துகொண்டு செட்டிலான அங்கிதா தற்போது அம்மாவாகி உள்ளார். 'ரஸ்னா' குளிர்பான விளம்பரத்தின் மூலம் புகழ்பெற்றவர் அங்கிதா ஜவேரி. திரைப்படங்களைப் போல சில தொலைக்காட்சி விளம்பரங்கள் நம் மனதை விட்டு அகலாது. அப்படி பலருக்கு விருப்பமாக இருந்த 'ரஸ்னா' விளம்பரத்தில் நடித்த குட்டிப்பொண்ணு இவர்தான். தெலுங்கு, கன்னட படங்களில் நடித்தவர் சுந்தர்.சி இயக்கிய 'லண்டன்' திரைப்படத்தின் மூலம் தமிழுக்கு வந்தார். அதில் பிரசாந்த் ஜோடியாக நடித்தார். அதன்பிறகு 'தகதிமிதா', 'திரு ரங்கா' உள்ளிட்ட சில படங்களில் நடித்தார்.

Ankitha jhaveri is famous for acting as a child actor in 'Rasna' ad. After growing up, she has acted in Tamil, Kannada and Telugu languages. Some years ago, she was married to a businessman and she is now blessed with a baby boy.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS