சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வரக்கூடாது-மோகன் ராஜா அதிரடி- வீடியோ

Filmibeat Tamil 2017-12-04

Views 1

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன் ராஜா இயக்கிய 'வேலைக்காரன்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் வெளியிடப்பட்டன. படக்குழுவினர் மற்றும் திரைப் பிரபலங்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

'வேலைக்காரன்' இசை வெளியீட்டு விழாவில் அதிரடியாக பேசிய இயக்குனர் மோகன் ராஜா, "சமூக அக்கறை கொண்டவர்கள் தேர்தெடுப்பது இரண்டே துறை தான். ஒன்று சினிமா, மற்றொன்று அரசியல். யார் சொன்னது சினிமாக்காரன் அரசியலுக்கு வரக்கூடாது என்று" எனப் பேசினார். தமிழ் சினிமாவில் இருந்து பல அரசியல் தலைவர்களும், தமிழ்நாட்டுக்கு சில முதலமைச்சர்களும் வந்திருந்தாலும் தற்போதும் சிலர் சினிமாக்காரர்கள் அரசியலுக்கு வரக்கூடாது எனப் பேசிவருகின்றனர். அவர்களுக்கு பதிலடி தரும் விதமாக இந்தக் கருத்தைச் சொல்லியிருக்கிறார் இயக்குநர் மோகன் ராஜா.

சிவகார்த்திகேயன், நயன்தாரா நடிப்பில் மோகன் ராஜா இயக்கிய 'வேலைக்காரன்' படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நேற்று இரவு நடைபெற்றது. இந்த இசை வெளியீட்டு விழாவில் படத்தில் இடம்பெற்ற அனைத்துப் பாடல்களும் வெளியிடப்பட்டன. படக்குழுவினர் மற்றும் திரைப் பிரபலங்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர்.

Sivakarthikeyan, Nayanthara starer 'Velaikkaran' directed by Mohan Raja, music launch event held in Chennai last night. Speaking at the launch of the 'velaikkaran' director Mohan Raja said, "The choice of socially interested people is only two sectors - one is the cinema and the other one is politics. Who said that the cinema people should not come into politics."

Share This Video

Download

Report form
RELATED VIDEOS