தல தளபதியை இயக்க காத்திருக்கும் மோகன் ராஜா !!- வீடியோ

Filmibeat Tamil 2018-01-08

Views 6.8K

அஜீத்தை வைத்து படம் எடுக்க விருப்பம் தெரிவித்துள்ளார் இயக்குனர் மோகன் ராஜா. சிவகார்த்திகேயன், நயன்தாரா உள்ளிட்டோரை வைத்து மோகன் ராஜா இயக்கிய வேலைக்காரன் படம் ஹிட்டாகியுள்ளது. இந்நிலையில் மோகன் ராஜா ட்விட்டரில் லைவ் சாட் செய்தார். ரசிகர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதில் அளித்தார்.

வேலாயுதம் படத்தை அடுத்து தளபதியுடன் மீண்டும் பணியாற்றுவது பற்றி கேட்ட ரசிகரிடம் நான் காத்துக் கொண்டிருக்கிறேன் என்று பதில் அளித்துள்ளார்.

தலயை வைத்து படம் எடுத்தால் கதை எப்படி இருக்கும்??? சமூகம் அல்லது நெகட்டிவ் அல்லது கமர்ஷியல் என்று கேட்டவரிடம், என் ஸ்டைலில் வித்தியாசமான நெகட்டிவாக இருக்கும் என்றார் மோகன் ராஜா.

சூர்யா அண்ணாவை வச்சு ஒரு படம் எடுங்க ப்ளீஸ் என்று சூர்யா ரசிகர்கள் சார்பில் ஒருவர் கேட்டுக் கொண்டார். அதற்கு மோகன் ராஜாவோ, நான் இஷ்டமாக உள்ளேன். பார்க்கலாம் என்றார்.

சிவகார்த்திகேயன் பற்றி ஏதாவது சொல்லுங்க சார் என்று ஒரு ரசிகர் மோகன் ராஜாவிடம் கேட்டார். அதற்கு அவர், கற்றுக் கொள்ளும் ஆர்வம் அதிகம் உள்ளவர். அவரின் அர்ப்பணிப்பால் சிகரம் தொடுவார் என்றார்.



Director Mohan Raja had a chat session with his fans on twitter on sunday night. When asked about directing a movie with Ajith, he said he would love to do one and would create a unique negative in his style.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS