எனக்கு எப்பவும் அவர் கூட விளையாட பிடிக்காது...உண்மைகளை உளறிய கோஹ்லி..வீடியோ

Oneindia Tamil 2017-12-04

Views 8.5K

இந்தியா இலங்கைக்கு எதிராக டெல்லியில் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் விளையாடிக் கொண்டு இருக்கிறது. நேற்று இரண்டாவது நாள் போட்டி முடிந்த பின் இந்திய வீரர்கள் இடையே நிறைய சுவாரசியமான சம்பவங்கள் நடந்தது.
இதில் முக்கியமாக இந்திய பேட்ஸ்மேன் புஜாரா, கேப்டன் கோஹ்லியை பேட்டி எடுத்தார். அவரின் இந்த ஒருநாள் ரிப்போர்ட்டர் அவதாரம் காரணமாக அங்கு நிறைய காமெடி நடந்தது.
கோஹ்லி இந்த பேட்டியில் சில சுவாரசியமான தகவல்களை பகிர்ந்து கொண்டார். முக்கியமாக அவர் தனக்கு எந்த வீரருடன் விளையாட பிடிக்காது என்றும் பேட்டியில் கூறியுள்ளார்.முதலில் கோஹ்லியிடம் புஜாரா இரட்டை சதம் குறித்து கேள்வி எழுப்பினார். அதற்கு கோஹ்லி "எப்போது எனக்கு செஞ்சுரிகள் அடிக்க பிடிக்கும். அதை அப்படியே கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்துக் கொண்டே செல்வதும் பிடிக்கும். எப்போதும் செஞ்சுரி எடுத்தவுடன் போதும் என்று விட மாட்டேன். அதைவிட அதிக ரன்கள் எடுக்கவே முயற்சி செய்வேன்'' என்று கூறினார்.இதே பேட்டியில் அவர் தனக்கு பிடிக்காத வீரர் குறித்தும் கூறியுள்ளார். அதில் ''எனக்கு புஜாராவை பிடிக்காது. அவர் எல்லா போட்டியிலும் என்னை வென்றுவிடுகிறார். டென்னிஸ், கால் பந்து என எல்லாவற்றிலும் அவர் வெற்றி பெறுகிறார். புஜாரா சிறிய தவறு கூட செய்வதில்லை. அதனால் அவருடன் விளையாடுவது கஷ்டமாக இருக்கிறது'' என்று கூறினார். பேட்டி எடுத்த புஜாரா இதை எதிர்பார்க்காமல் சிரித்துக் கொண்டு இருந்தார்.

இந்த நிலையில் அவர் புஜாரா குறித்து இன்னும் நிறைய பேசினார். அதில் ''புஜாரா எனக்கு ஒருவகையில் ரோல் மாடல். எனக்கு தொடக்கத்தில் டெஸ்ட் போட்டிகள் விளையாட பிடிக்காது. இப்போது நான் பொறுமையாக அதிக நேரம் களத்தில் இருக்க காரணம் புஜாராதான். அவரிடம் பொறுமையாக இருக்க கற்றுக் கொண்டேன்'' என்று புஜாரா குறித்து பெருமையாக பேசி இருக்கிறார்.


Virat Kohli reveals who he hates playing against in every sport. He says that he doesn't want to play against Pujara in an interview which is took by Pujara.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS