ராகுல் காந்தி பதவியேற்பு விழாவில் உணர்ச்சிவசப்பட்ட மன்மோகன் சிங்- வீடியோ

Oneindia Tamil 2017-12-16

Views 3.3K

ராகுல் காந்தி காங்கிரஸ் தலைவராக பதவியேற்ற விழாவில் பங்கேற்ற முன்னாள் பிரதமர் மன்மோகன்சிங் உணர்ச்சிமிகுதியில் உரையாற்றினார். மன்மோகன்சிங் பேசியதாவது: இது ஒரு வரலாற்று சிறப்பு மிக்க நாள். நான் எமோஷனல் ஆனால் தயவு செய்யது என்னை மன்னித்துவிடுங்கள். சோனியா காந்தி தலைவராக இருந்தபோது காங்கிரஸ் கட்சிக்கு பலம் ஊட்டினார்.
நான் காங்கிரஸ் கமிட்டி உறுப்பினராக சோனியாவுடன் பணியாற்றியுள்ளேன். 10 வருடங்கள் பிரதமராக இருந்தபோது சோனியா அறிவுரையை பெற்று செயலாற்றினேன். எங்களது 10 வருட ஆட்சியில் நாட்டின் பொருளாதார வளர்ச்சி 7.8 சதவீதம் என்ற அளவில் சிறப்பாக இருந்தது.

சோனியாவின் வழிகாட்டுதல் படி எங்கள் அரசு பல சிறப்புமிக்க முடிவுகளை எடுத்தது. ராகுல் காந்தியும் திறமையானவர். நீண்ட காலமாக அவர் அரசியல் பயிற்சியில் உள்ளார்.
காங்கிரசின் பல்வேறு செயல்பாடுகளை ராகுல் மேற்கொண்டிருந்தார். நாட்டின் அரசியலில் சில இடையூறுகள் தென்படும் இந்த சூழ்நிலையில் ராகுல் காந்தி தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார்.

"Today is a historic day for India…Please pardon me if I get somewhat emotional," says former Prime Minister Manmohan Singh.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS