சென்னை விமானநிலையத்தில் தமிழக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் திருநாவுக்கரசர் பேட்டி அளித்தார் .அப்போது தேர்தல் பிரச்சாரத்திற்காக காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி தமிழகம் வர இருப்பாதால் கன்னியாகுமரியில் செய்ய வேண்டிய முன்னேறபாடுகள் குறித்து பார்வையிட செல்கிறோம் என்றும் அதிமுக, பாஜக கூட்டணி என்பது மூழ்கும் கூட்டணி. தேமுதிக கூட்டணி குறித்து அதிமுக , திமுக ஆகிய இரு கட்சிகளிடம் பேச்சுவார்த்தை நடத்துவது தவறான ஒன்று, இரு கட்சிகளுடன் சவாரி செய்ய நினைப்பது தவறு, திமுக கூட்டணியில் தேமுதிக சேர இடமில்லை என்று திமுக பொருளாளர் துரைமுருகன் கூறிய கருத்தை வரவேற்கிறேன், மேலும் தேமுதிகவை கூட்டணியில் சேர்க்க வேண்டுமென்றால் திமுக தான் முடிவு செய்ய வேண்டும், என்றார்.
Rahul Gandhi's visit to Congress leader
#RahulGandhi
#Congress
#TamilNadu