மோடியின் காங்கிரஸ் இல்லா பாரதம் என்ற வாசகத்தை ஏற்க மறுத்த மக்கள்- வீடியோ

Oneindia Tamil 2017-12-18

Views 9.8K

இந்திய மக்களின் மனநிலையை பார்க்கும்போது, பிரதமர் மோடியின், 'காங்கிரஸ் இல்லாத பாரதம்' கனவு பலிக்கப்போவதில்லை என்பது உறுதியாகியுள்ளது. இந்த அறைகூவலுக்கு, அவரின் சொந்த மாநில மக்களே செவி சாய்க்கவில்லை என்பது இன்றைய தேர்தல் முடிவுகள் சொல்லும் பாடம். 2014ம் ஆண்டு லோக்சபா தேர்தலை சந்தித்தபோது, 'காங்கிரஸ் முக்த் பாரத்' என்ற கோஷம் தீவிரமாக மோடியால் முன் வைக்கப்பட்டது. ஊழல் குற்றச்சாட்டுகள் நிரம்பி வழிந்த நிலையில் இந்த பிரச்சாரம் மக்களுக்கு பிடிக்கும் என்பது மோடியின் எண்ணம். ஏறத்தாழ அந்த தேர்தலில் அப்படித்தான் முடிவும் வந்தது.

பிரதான எதிர்க்கட்சி அந்தஸ்தை பெற முடியாத அளவுக்குத்தான் காங்கிரஸ் தோல்வியை தழுவியது. பாஜக அறுதி பெரும்பான்மையோடு ஆட்சியை பிடித்தது. எனவே இந்த கோஷத்தை கெட்டியாக பிடித்துக்கொண்டது பாஜக மற்றும் மோடி. அடுத்தடுத்த பல தேர்தல்களில் பாஜக இந்த கோஷத்தை முன்வைத்து வெற்றி கண்டது.
ஆனால், ஒரு எல்லைக்கு பிறகு இந்த கோஷம் எடுபடவில்லை. ஏன் காங்கிரஸ் இல்லாத இந்தியா உருவாக வேண்டும் என்ற கேள்வி மக்கள் மனதில் எழுந்துள்ளது. காங்கிரஸ் அரசு மீது பல்வேறு குற்றச்சாட்டுகள் இருந்தாலும், பாஜக ஆட்சிக்கு வந்து இத்தனை வருட காலத்தில் ஊழல் குற்றச்சாட்டுகளுக்காக காங்கிரசின் பெரிய தலைகள் யாருமே சிறைக்கு செல்லவில்லை. இதுவும் அந்த கோஷம் எடுபடாமல் போக காரணம்.

Modi can't claim a Congress-mukt (free) India any longer, as many state assembly election results shows people still beleive in Congress.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS