3 ஹீரோக்களை வைத்து படம் இயக்க உள்ளாராம் அட்லீ. ராஜா ராணி படம் மூலம் இயக்குனர் ஆனவர் அட்லீ. அந்த படத்தை அடுத்து விஜய்யை வைத்து தெறி படத்தை எடுத்தார். தெறி ஹிட்டான பிறகு மீண்டும் விஜய்யுடன் கூட்டணி சேர்ந்து மெர்சல் படத்தை இயக்கினார் அட்லீ. படம் எடுத்தால் தல, தளபதியை வைத்து தான் என்று அடம்பிடித்தார் அட்லீ என்று கோலிவுட்டில் பேச்சாக கிடந்தது.
மெர்சலை அடுத்து புதிய படம் எடுக்க தயாராகி வருகிறாராம் அட்லீ. 3 ஹீரோக்களை வைத்து படம் எடுக்கப் போகிறார் அட்லீ என்று செய்திகள் வெளியாகியுள்ளன.
ஒரு ஹீரோவை வைத்து மெர்சல் படம் எடுத்தபோதே அட்லீ பட்ஜெட்டை எகிற வைத்துவிட்டார். அட்லீயால் தயாரிப்பாளரின் பாடு பாவம் என்று கூறப்பட்டது. இந்நிலையில் 3 ஹீரோக்கள் படமாம்.
தல, தளபதி நிச்சயம் இந்த படத்தில் சேர்ந்து நடிக்க மாட்டார்கள். ஒரு வேளை சென்டிமென்ட்டுக்காக விஜய்யை இந்த படத்தில் ஒப்பந்தம் செய்வாரோ அட்லீ என்ற கேள்வி எழுந்துள்ளது.
மெர்சல் படத்தில் தளபதி சொல்லியும் கேட்காமல் அட்லீ வைத்த சில வசனங்களால் பாஜக கொந்தளித்து இலவச விளம்பரம் கொடுத்தது. இலவச விளம்பரம் கிடைத்தபோதிலும் தளபதி அட்லீ மீது கடுப்பில் உள்ளார் என்று கோடம்பாக்கத்தில் பேசப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.
Atlee is reportedly getting ready to direct a new movie after Mersal. Atlee's upcoming movie will have three heros. The cast and crew is expected to announce soon.