ஆர்கே நகர் இடைத்தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் டிடிவி தினகரன் தரப்பு ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோவை வெளியிட்டு பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த செப்டம்பர் 22ம் தேதி முதல் 72 நாட்களக் ஜெயலலிதா மருத்துவமனையில் இருந்த போது சிகிச்சை பெற்ற புகைப்படங்கள், வீடியோ வெளியிடப்படவில்லை என்று ஓராண்டாகவே சொல்லி வரப்பட்டது. ஆனால் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்ற வீடியோ எடுக்கப்பட்டதாகவும் அதனை சசிகலா தான் எடுத்திருக்கிறார்.
அந்த வீடியோவில் ஜெயலலிதாவின் ஆடைகள் சற்று விலகி இருக்கும் என்பதால் அவருடைய இமேஜ் கருதி வெளியிடவில்லை என்று தினகரன் கூறி இருந்தார். பொதுமக்களுக்கு இந்த வீடியோ வெளியிடப்படாது விசாரணை ஆணையத்திடம் ரகசியமாக கொடுத்துக் கொள்ளலாம் என்று சசிகலா கூறியதாகவும் தினகரன் கூறி இருந்தார். இந்நிலையில் நாளை ஆர்கே நகர் வாக்குப்பதிவு நடைபெறும் நிலையில் ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெறும் வீடியோவை டிடிவி. தினகரன் ஆதரவாளர் வெற்றிவேல் வெளியிட்டுள்ளார்.
TTV Dinakaran faction released the video of Jayalalitha as RK Nagar bypolls is tomorrow, the first video of Jayalalitha shows she is recovered after admitted in hospital.