ஜல்லிக்கட்டு, சுசி லீக்ஸ், மெர்சல் பிரச்சனை, பிக் பாஸ், லட்சுமி - சர்ச்சைகளின் ஆண்டா 2017 ?- வீடியோ

Filmibeat Tamil 2017-12-22

Views 1.4K

2017ம் ஆண்டு திரையுலகினருக்கு சர்ச்சைகள் மிகுந்த ஆண்டாக அமைந்துவிட்டது. 2017ம் ஆண்டு நிறைவடைய இன்னும் சில நாட்களே உள்ளன. இந்நிலையில் இந்த ஆண்டு திரையுலகம் சந்தித்த சர்ச்சைகள் பற்றி பார்ப்போம். ஜனவரி மாதம் துவங்கியபோதே சர்ச்சையும் கிளம்பிவிட்டது. ஜனவரி மாதம் சிக்கியது தயாரிப்பாளர் சங்க தலைவர் விஷால் தான்.

ஜல்லிக்கட்டு விவகாரம் தொடர்பாக தமிழக இளைஞர்கள் புரட்சி செய்தபோது விஷால் பிரச்சனையில் சிக்கினார். விஷால் ஜல்லிக்கட்டுக்கு எதிராக பேசினார் என்று சர்ச்சை கிளம்பியது. நான் ஜல்லிக்கட்டுக்கு எதிராக எதுவும் கூறவில்லை என்ற விஷாலின் பேச்சை நம்ப யாரும் தயாராக இல்லை. இதையடுத்து அவர் ட்விட்டரில் இருந்து வெளியேறினார். ஜல்லிக்கட்டு என்றால் என்ன என்று கேட்ட ஆர்யாவையும் நெட்டிசன்ஸ் வறுத்தெடுத்தார்கள். பீட்டா ஆதரவாளரான த்ரிஷாவுக்கும் டோஸ் விழுந்தது.

தனுஷ்-அமலா பால் லீலை வீடியோவை வெளியிடுவதாக சுசித்ரா கூறினார். பின்னர் தனது ட்விட்டர் கணக்கு ஹேக் செய்யப்பட்டதாகக் கூறி பின் வாங்கிவிட்டார். அவருக்கு மனதளவில் பிரச்சனை இருப்பதாக அவரின் கணவர் தெரிவித்தார். இதற்கிடையே சுசிலீக்ஸ் என்ற பெயரில் ஆளாளுக்கு ட்விட்டரில் கணக்கு துவங்கி பிரபலங்களின் கசமுசா புகைப்படங்கள், வீடியோக்களை வெளியிட்டனர்.

Cine industry has seen its own share of controversies in the year 2017. Vishal is the man who started and ended the year with contorversies. Let 2018, be a peaceful year for the Tamil cinema industry.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS