2 ஜி வழக்கில் இருந்து விடுதலையான திமுக எம்பி கனிமொழிக்கு கட்சியில் முக்கிய பொருப்பான பொருளாளர் பதவியை வழங்க தலைமை கழகம் முடிவெடுத்துள்ளது. அதற்கான அறிவிப்பு வரும் ஒரிரு நாளில் வெளியாகும் என்றும் தெரிகிறது.
2ஜி வழக்கில் திமுக எம்பி கனிமொழி மற்றும் முன்னால் மத்திய அமைச்சர் ராஜா மீது சிபிஐ வழக்கு பதிவு செய்தது. இது குறித்த வழக்கு டெல்லி பாட்யாலாவில் உள்ள சிறப்பு நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. இந்த வழக்கின் தீர்ப்பு நேற்று முன்தினம் வழங்கப்பட்டது. அதில் கனிமொழி மற்றும் ராஜா உள்ளிட்ட குற்றம்சாட்டப்பட்ட அனைவர்கள் மீதும் குற்றம் நிரூபிக்கப்படாததால் அவர்களை இந்த வழக்கில் இருந்து விடுவிப்பதாக நீதிபதி அறிவித்தார். இதையடுத்து 2ஜி வழக்கில் இருந்து விடுதலையான கனிமொழி மற்றும் ராசா ஆகியோர் டெல்லியில் இருந்து விமானம் மூலம் இன்று சென்னைக்கு வந்தனர். அவர்களுக்கு திமுக தொண்டர்கள் உற்சாக வரவேற்ப்பு அளித்தனர். விமான நிலையத்தில் இருந்து கோபாலபுரம் சென்ற அவர்கள் திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்து ஆசி பெற்றனர். பின்னர் திமுக தலைவர் கருணாநிதியும் பொது செயலாளர் அன்பழகனும் சிறிது நேரம் கலந்து பேசிக்கொண்டிருந்துள்ளனர். அப்போது திமுகவில் பொருளாளர் பதவியை கனிமொழிக்கு வழங்க முடிவெடுத்துள்ளனர். அதற்கான அறிவிப்பு ஒரிரு நாளில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Des : The DMK has decided to grant DMK MP Kanimozhi as the chief beneficiary of the party in the 2G case. It seems that the announcement will be released on the same day.