நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.இயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறிக்கும் வகையில் டிசம்பர் 25 -ம் தேதி கிறிஸ்துமஸ் விழாவாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது. அதன்படி இன்று தமிழகம் முழுவதிலும் உள்ள தேவாலயங்களில் சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன.புகழ்பெற்ற சென்னை சாந்தோம் பேராலயத்தில் நள்ளிரவில் நடந்த சிறப்பு பிரார்த்தனையில் ஆயிரக்கணக்கானோர் பங்கேற்றனர். அதேபோல் பெசன்ட் நகர் தேவாலயத்தில் நடந்த சிறப்பு வழிபாட்டில் ஏராளமானோர் கலந்துகொண்டனர். வேளாங்கண்ணி புனித ஆரோக்கிய அன்னை தேவாலயத்தில் ஆயிரக்கணக்கானோர் சிறப்பு கூட்டு பிரார்த்தனை செய்தனர். தூத்துக்குடி பனிமய மாதா பேராலயத்திலும் கிறிஸ்துமஸ் பண்டிகையொட்டி நள்ளிரவு திருப்பலி நடைபெற்றது. திருச்சி சகாய மாதா பேராலயம், மதுரை புனித மரியன்னை தேவாலயம், பாஸ்டின் நகர் தூயபவுல் ஆலயம், நெல்லை, கோவை, நாகர்கோவில், கன்னியாகுமரி உள்பட அனைத்து தேவாலயங்களிலும் சிறப்பு பிரார்த்தனை நடைபெற்று வருகிறது. விழாவையொட்டி அனைத்த ஆலயங்களும் வண்ணவிளக்கு களால் அலங்கரிக்கப்பட்டிருந்தது.
நாடு முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை இன்று கொண்டாடப்படுகிறது. இதையொட்டி தமிழகத்தில் உள்ள கிறிஸ்தவ ஆலயங்களில் நள்ளிரவு சிறப்பு பிரார்த்தனை நடைபெற்றது.இயேசு கிறிஸ்துவின் பிறப்பை குறிக்கும் வகையில் டிசம்பர் 25 -ம் தேதி கிறிஸ்துமஸ் விழாவாக உலகம் முழுவதும் கொண்டாடப்படுகிறது.
Special prayers in all churches for Christmas celebration