வடிவேலுவின் மருமகள் பற்றி ஒரு தகவல் வெளியாகி தீயாக பரவியுள்ளது. வடிவேலு தனது மகன் சுப்ரமணிக்கு புவனேஸ்வரி என்ற பெண்ணை பார்த்து திருமணம் செய்து வைத்தார். அவர்களின் திருமணம் சொந்த ஊரில் எளிமையாக நடந்தது.
திருமண விழாவில் வடிவேலுவின் உறவினர்கள் மட்டுமே கலந்து கொண்டனர். இந்நிலையில் வடிவேலுவின் மருமகள் யார் என்ற விபரம் வெளியாகியுள்ளது.
சிவகங்கை மாவட்டம் திருப்புவனத்தை சேர்ந்த புவனேஸ்வரியின் தந்தை மரவேலை செய்யும் கூலித் தொழிலாளியாம். குடிசை வீட்டில் வசித்த புவனேஸ்வரியை தன் வீட்டு மருமகளாக்கியுள்ளார் வடிவேலு. நாம் தான் வசதியாக இருக்கிறோமே அதனால் ஒரு ஏழை வீட்டு பெண்ணுக்கு வாழ்க்கை கொடுக்கலாம் என்ற நல்ல எண்ணத்தில் இப்படி செய்தாராம் வடிவேலு.
Buzz is that popular comedian Vadivelu's daughter-in-law is the daughter of a daily wage who lives in a hut in Thirupuvanam in Sivaganga district.