விழுப்புரத்துக்கு அருகேயுள்ள கூவாகம் கிராமத்தில்தான், நாம் சந்திரா பாட்டியையும் அவர் அம்மா சீதாலெட்சுமியையும் சந்தித்தோம். சந்திராவுக்கு 65 வயது இருக்கும். அவர் அம்மாவுக்கு 87 வயதுக்கும் மேல் இருக்கலாம். அந்த வீட்டுக்குள் அவர்கள் இருவரும் மட்டும்தான் தனியாக வாழ்கிறார்கள். அதிலும், சந்திரா மனநலம் பாதிக்கப்பட்டவர். 65 வயதான தன் மகளை இப்போதும் கண்ணும் கருத்துமாகப் பார்த்துக்கொள்பவர் சீதாலெட்சுமி பாட்டிதான்.
emotional story of mom seethalakshmi and her daughter