அரசியலில் குதித்தார் நடிகர் ரஜினிகாந்த்

Oneindia Tamil 2017-12-31

Views 337

வரும் சட்டமன்ற தேர்தலில் தனிகட்சி தொடங்கி தமிழகத்தில் உள்ள 234 சட்ட மன்ற தொகுதிகளிலும் போட்டியிட போவதாக நடிகர் ரஜினிகாந்த் அறிவித்தார்.

பல ஆண்டுகளாக நடிகர் ரஜினிகாந்த் அரசியலில் ஈடுபடுவாரா மாட்டாரா என்ற கருத்து அவரது ரசிகர்கள் மட்டும் இன்றி அனைத்து தரப்பினரிடையேயும் நிலவி வந்தது. இந்நிலையில் கடந்த 5 நாட்களாக ராகவேந்திரா மண்டபத்தில் தனது ரசிகர்களுடன் புகைப்படம் எடுத்து வரும் நடிகர் ரஜினிகாந்த் இன்று அரசியல் பிரவேசம் குறித்து தனது கருத்தை வெளியிட்டார். அப்போது வரும் சட்டமன்ற தேர்தலில் தனி கட்சி தொடங்கி தமிழகத்தில் உள்ள அனைத்து சட்டமன்ற தொகுதிகளிலும் போட்டியிட போவதாக அறிவித்தார். மேலும் உள்ளாட்சி தேர்தல் நடைபெற்றால் அதில் போட்டியிட போவதில்லை என்றும் சட்டமன்ற தேர்தலுக்கு பல ஆண்டுகள் இருப்பதால் அதற்கு முன் தனது கட்சியை பலப்படுத்தி தேர்தலில் போட்டியிடும் முன் தன்னால் தமிழக மக்களுக்கு என்ன செய்ய முடியும் முடியாது என்று தெரிவிக்க உள்ளதாக கூறினார்.

ரசிகர் மத்தியில் உரையாற்றிய போது தமிழகத்தில் அரசியல் சிஸ்டம் சரியில்லை என்றார். தனக்கு பதவி பணம் முக்கியமில்லை என்றும் மக்கள் தான் முக்கியம் என்று கூறினார். தமிழக மக்களின் தன்மானம் கடந்த ஓராண்டுகளில் பறிபோகிவிட்டதாக ரஜினி கூறினார். பறிபோன தமிழக மக்களின் தன்மானத்தை காப்பாற்றவே அரசியலில் ஈடுபட உள்ளதாகவும் தன் கட்சியை சேர்ந்தவர்கள் பொதுமக்களின் காவலர்களாக இருப்பார்கள் என்றும் தனது கட்சிக்கு தொண்டர்கள் தேவையில்லை என்று ரஜினிகாந்த் தெரிவித்தார். மேலும் தான் ஆன்மீக அரசியலில் ஈடுபட உள்ளதாக கூறினார்.

Des : Actor Rajinikanth announced that he would contest the 234 constituencies in Tamil Nadu in the coming assembly elections.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS