தீவிரவாதத்திற்கு பாகிஸ்தான் ஊக்கம் அளிப்பதாக அமெரிக்க அதிபர் டிரம்ப் குற்றச்சாட்டு வைத்து இருந்தார். அவரது இந்த 'புத்தாண்டு டிவிட்' உலகம் முழுக்க அதிர்ச்சியை கிளப்பியது. அமெரிக்கா இந்தியாவிற்கு நெருக்கமாக இருந்தாலும் பாகிஸ்தானிற்கும் நெருக்கமான நாடாகவே இருந்து வந்தது. இந்த நிலையில் தற்போது திடீர் என்று பாகிஸ்தான் குறித்து அமெரிக்க அதிபர் இப்படி குறிப்பிட்டது அதிர்ச்சியாக இருந்தது. அது மட்டும் இல்லாமல் பாகிஸ்தான் குறித்து டிவிட்டரில் டிரம்ப் கொஞ்சம் கோபமாகவே எழுதி இருந்தார். இதற்கு தற்போது இந்தியாவும் பதில் அளித்துள்ளது.
நேற்று டிரம்ப் போட்ட டிவிட்டில் ''பாகிஸ்தானுக்கு அமெரிக்கா கடந்த 15 வருடமாக முட்டாள் போல உதவி இருக்கிறது. இதுவரை 33 பில்லியன் டாலர் அவர்களுக்கு கொடுத்து இருக்கிறோம். ஆனால் பதிலுக்கு பாகிஸ்தான் எங்களுக்கு பொய்யும், வஞ்சகமும் மட்டுமே கொடுத்துள்ளது. நாங்கள் கஷ்டப்பட்டு தேடும் தீவிவாதிகளுக்கு பாகிஸ்தான் பாதுகாப்பாக இடம் அளிக்கிறது'' என்று குறிப்பிட்டு இருந்தார்.