'எம்.எஸ்.தோனி தி அன்டோல்டு ஸ்டோரி' படம் மூலம் நன்கு அறியப்பட்டவர் நடிகையும், மாடலுமான திஷா பதானி. தற்போது தமிழில் சுந்தர். சி இயக்கத்தில் ஜெயம் ரவி, ஆர்யா இணைந்து நடிக்க வரலாற்றுப் படமாக உருவாக இருக்கும் 'சங்கமித்ரா' படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார். இவர் ட்விட்டரில் வெளியிட்டுள்ள புகைப்படம் ஒன்று தற்போது செம வைரலாகி வருகிறது. நடிகையாக இருந்தாலும் மாடலிங் மீது மிகவும் ஆர்வம் கொண்ட திஷா பதானி, ஏராளமான விளம்பரப் படங்களில் நடித்தும் மாடலாக போஸ் கொடுத்தும் வருகிறார். தனது கவர்ச்சிப் படங்கள், வீடியோக்கள் என அவ்வப்போது தனது சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு வருகிறார்.
தமிழ் திரையுலகில் பெரும் எதிர்பார்ப்புடன் தயாரிப்பில் இருக்கும் படம் 'சங்கமித்ரா'. கான் திரைப்பட விழாவில் அறிமுகப்படுத்தப்பட்ட பின்பு, இப்படத்திலிருந்து விலகினார் ஸ்ருதிஹாசன். பிறகு, திஷா பதானி ஒப்பந்தம் செய்யப்பட்டு இருக்கிறார். 'சங்கமித்ரா' படத்தில் ஜெயம் ரவி மற்றும் ஆர்யா நடிக்கவிருக்கிறார்கள். ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைக்க, திரு ஒளிப்பதிவு செய்யவுள்ளார். கலை இயக்குநராக சாபு சிரில் பணிபுரிந்து வருகிறார். பெரும் பொருட்செலவில் தேனாண்டாள் பிலிம்ஸ் நிறுவனம் தயாரிக்கவுள்ளது. தற்போது பாலிவுட் நாயகி திஷா பதானி "சொர்க்கத்தில் இருக்கிறேன்" என்று குறிப்பிட்டு ஒரு பிகினி புகைப்படத்தை வெளியிட்டுள்ளார். அந்தப் புகைப்படம் தற்போது சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாக பரவி வருகிறது.
Disha Patani who became famous through the movie "Dhoni the untold story" has recently posted a bikini picture on instagram.. It has been retweeted and been the trending picture recently.. Disha Patani is going to act in a new historical tamil movie called sangamithra along with arya and jayam ravi. The big budget movie is being produced by Thenandal films.