ஆர்கே நகரில் தினகரன் பெற்ற வெற்றி எரிநட்சத்திரம் போன்றது என எச் ராஜா தெரிவித்துள்ளார். மேலும் தினகரன் வெற்றி தொடர்பாக நாளைக்குள் டைம் பாம் வெடிக்கும் என்றும் அவர் சூசகமாக தெரிவித்துள்ளார். அண்மையில் நடந்து முடிந்த ஆர்கே நகர் தேர்தலில் டிடிவி தினகரன் வெற்றி பெற்றார். சுயேச்சை வேட்பாளராக போட்டியிட்ட அவர் 89 ஆயிரம் வாக்குகள் பெற்று வெற்றி வாகை சூடினார். இந்த தேர்தலில் ஆளும் அதிமுக சார்பில் போட்டியிட்ட மதுசூதனன் தோல்வியடைந்தார். திமுக டெபாசிட் இழந்தது. பாஜக நோட்டா பெற்ற வாக்குகளைவிடவும் குறைவான வாக்குகளை பெற்றது.
இந்நிலையில் தினகரனின் வெற்றி ஜனநாயகத்திற்கு எதிரானது என்றும் பணம் கொடுத்து வாங்கப்பட்டது என்றும் எதிர்க்கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஹவாலா ஃபார்முலாவை பயன்படுத்தி தினகரன் வெற்றி பெற்றிருப்பதாகவும் அது நீடிக்காது என்றும் அதிமுகவினர் குற்றம்சாட்டி வருகின்றனர்.
கடந்த 29ஆம் தேதி எம்எல்ஏவாக பதவி ஏற்றுக்கொண்ட தினகரன் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான ஆட்சி 3 மாதத்தில் கவிழும் என தெரிவித்தார். மேலும் ஆட்சியையும் கட்சியையும் விரைவில் கைப்பற்றுவேன் என்றும் அவர் சூளுரைத்துள்ளார்.
இந்நிலையில் பாஜக தேசிய செயலாளர் எச் ராஜா செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது டிடிவி தினகரனின் வெற்றி எரிநட்சத்திரம் போன்றது என்றார்.
மேலும் ஆர்.கே. நகரில் தினகரன் வெற்றி பெற்றது தொடர்பாக நாளை இரவுக்குள் டைம்பாம் வெடிக்கலாம் என்றும் அவர் சிரித்தப்படியே சூசகமாக தெரிவித்தார். இதனால் டிடிவி தினகரனுக்கு எதிராக நாளை இரவுக்குள் ஏதோ பூகம்பம் வெடிக்கலாம் என கருதப்படுகிறது.
BJP national secratary H Raja says, TTV Dinakaran victory in RK Nagar is a meteor. He also says A time bomb will be blast within tomorrow night on TTV dinakaran's RK Nagar victory.