டிடிவி தினகரன் ஆதரவாளர்கள் வீட்டில் பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகி ன்றனர்
இராமநாதபுத்தில் அமைச்சர் மணிகண்டனுக்கும் டிடிவி தினகரன் அணியினருக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே கடும் பேச்சு மோதல் நடைபெற்றது வருகின்றது கடந்த 25ம் தேதி அரண்மனையில் நடைபெற்ற ஜெயலலிதா பிறந்தநாள் பொதுக்கூட்டத்தில் பேசிய அமைச்சர் அதிமுக வேஸ்டியை டிடிவி தினகரன் அணியினர் கட்டினால் உருவி விடுங்கள் என்று பேசினார். இதனைத் தொடர்ந்து 1ம் தேதி டிடிவி தினகரன் அணியினர் வேஸ்டி அணிந்து டி குடிக்கும் போரட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் நேற்று நள்ளிரவு டிடிவி தினகரன் அணியின் இளைஞரணி செயலாளர் கமல் முன்னால் நகர்மன்ற உறுப்பினர் தவமுனியசாமி ஆகிய இருவர் வீட்டிலும் மர்ம நபர்கள் பெட்ரோல் குண்டு வீசிவிட்டு தப்பிச் சென்றனர். இதனையடுத்து சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் வழக்கு பதிவு செய்து பெட்ரோல் குண்டு வீசிய மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர் இதற்கிடையில் அமைச்சர் மணிகண்டனின் தூண்டுதலின் பேரிலேயே பெட்ரோல் குண்டு வீசப்பட்டதாக டிடிவி தினகரன் அணியினர் குற்றம்சாட்டியுள்ளனர்
TTV Dinakaran supporters search for police in search of police