சமூகத்தை்ப போலவே கலையும் இங்கு சாதியால் பிரிந்து கிடக்கிறது. அவற்றை ஒன்று சேர்க்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது, என இயக்குநர் பா ரஞ்சித். பா.ரஞ்சித்தின் 'நீலம் பண்பாட்டு மையம்' மற்றும் 'மெட்ராஸ் ரெக்கார்ட்ஸ்' இணைந்து ஒருங்கிணைத்திருக்கும் 'தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்ஸ்' இசை நிகழ்ச்சி சென்னையில் இன்று நடைபெற இருக்கிறது. முன்னதாக, 'கானா-ராப்-ராக்' மூன்று வடிவங்களையும் கலந்து நடைபெற இருக்கும் இந்நிகழ்ச்சியில் பங்குபெரும் இசைக்குழு மற்றும் இசைக்கலைஞர்களின் அறிமுகக் கூட்டம் நடைபெற்றது. இதில் இயக்குநர் பா.ரஞ்சித் கலந்துகொண்டு கலைஞர்களை பத்திரிக்கையாளர்களுக்கு அறிமுகம் செய்து வைத்தார்.
பின்னர் பா.ரஞ்சித் பேசுகையில், "நீலம் பண்பாட்டு மையம் முன்னெடுத்திருக்கிற அடுத்த முயற்சிதான் இந்த 'தி கேஸ்ட்லெஸ் கலெக்டிவ்ஸ்' இசை நிகழ்ச்சி. இதில் பங்குபெற்றிருக்கும் கலைஞர்கள் எல்லோருமே அவரவர் பகுதிகளில் மிக பிரபலமானவர்கள். இவர்கள் எல்லோரையும் ஒருங்கிணைத்து, மக்களின் இசையாகிய கானாவை உலகம் முழுவதும் பரப்புகிற முயற்சியில் இறங்கியுள்ளோம்.
மக்களுக்கான அரசியல் பேசவும், மக்களின் பிரச்சனைகளைப் பேசவும் கலையை பயன்படுத்த வேண்டும். சாதி, மதமற்ற இணக்கம் கலையின் எல்லா வடிவத்திலும் கொண்டுவர வேண்டும். இந்த சமூகம் சாதியால் பிரிந்து கிடப்பது போலவே கலையும் இங்கு பிரித்து வைக்கப்பட்டுள்ளது. அப்படி தமிழகத்தின் எல்லா கலைகளையும் ஒரே குடையின் கீழ் கொண்டு வருவதற்கான தேவை இங்கு இருக்கிறது. அயோத்திதாச பண்டிதர் கூறியது போல சாதியற்ற தமிழர்களாக இணைவது முக்கியம். அதற்கு இந்த இசை வடிவம் தொடக்கமாக இருக்கும்.
Director Pa Ranjith says that music and other arts are dividing her in the name of caste.