தமிழக அரசு வரட்டு கவுரவம் பார்க்காமல் போக்குவரத்து தொழிலாளர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தி சுமூக தீர்வு எட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
வேலூரில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில் விடுதலை சிறுத்தை கட்சி தலைவர் திருமாவளவன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது பேசிய அவர் போக்குவரத்துறையினருக்கு வழங்கப்பட வேண்டிய நிலுவை தொகை 7 ஆயிரம் கோடியை அரசு வழங்க நடவடிக்கை எடுக்காமல் வரட்டு கவுரவம் பார்த்து வருவதாக கூறினார். அரைகுறை பயிற்ச்சி முடித்தவர்களை கொண்டு பேருந்துகள் இயக்கும் போது விபத்துக்கள் ஏற்படுவதாகவும் போக்குவரத்து தொழிலாளர்களின் வேலை நிறுத்தத்தால் பொதுமக்கள் மிகுந்த சிரமம் அடைந்துள்ளதாகவும் திருமாவளவன் கூறினார். நடிகர் ரஜினிகாந்த் ஆன்மீக அரசியல் என்று கூறியுள்ளது மதம் சார்ந்த அரசியல் தான் என்றார்.
Des : The Tamil Nadu government has called for a smooth solution to the movement of transport workers without looking forward to their loyalty.