பொங்கல் பண்டிகை வருவதையொட்டி, நகரங்களில் வசித்து வரும் பலரும் சொந்த ஊர்களுக்குக் கிளம்பி இருக்கிறார்கள். தமிழர் திருநாளான பொங்கல் அன்றைக்காவது சொந்த ஊரில் மக்களோடு இருக்கப் பிரியப்படுபவர்கள் நகரங்களின் இரைச்சல் மறந்து ஊருக்குப் போவார்கள். தமிழகத்திற்கு வந்த வெளிமாநிலத்தவர்கள் பொங்கல் பண்டிகை கொண்டாடுவதில்லை என்றாலும், பள்ளி, கல்லூரி, அலுவலகங்கள் உள்ளிட்டவற்றில் பொங்கல் விழா நடந்து வருகிறது.
அவ்வாறே, சினிமாவில் பணிபுரிபவர்கள், ஷூட்டிங் ஸ்பாட்டில் பொங்கல் கொண்டாடி மகிழ்வார்கள். அதன்படி, ஜி.வி.பிரகாஷ், ஷாலினி பாண்டே, தலைவாசல் விஜய், தம்பி ராமையா ஆகியோர் நடிக்கும் '100% காதல்' படத்தை சந்திரமௌலி என்பவர் இயக்குகிறார். இந்தப் படம் தெலுங்கில் வெளியாகி வெற்றி பெற்ற '100% லவ்' படத்தின் ரீமேக் ஆகும். 'அர்ஜூன் ரெட்டி' நாயகி ஷாலினி பாண்டே இப்படத்தின் மூலம் தமிழில் அறிமுகமாகி இருக்கிறார்.
'100 percent kaadhal' team celebrated Pongal in shooting spot. Shalini Pandey celebrate pongal festival with ethnic dress. GV Prakash and Shalini Pandey's fans are sharing these photos on social media.