பெற்றோர் வயிற்றில் புளியை கரைத்த ஆண்டாள் விவகாரத்தில் வெளியாகியுள்ள பெண் சீடர்களின் பகீர் வீடியோ

Oneindia Tamil 2018-01-23

Views 11

ஆண்டாளை இழிவாக பேசியதாக வைரமுத்துவை ஆபாச வசை பாடி இணையத்தில் வெளியிடுவதை ட்ரென்ட்டாக வைத்துள்ளனர் பெண் சீடர்கள் சிலர். இவர்களின் சொல்லவும் கேட்கவுமே கூசும் ஆபாச வசவுகளை சமூக வலைதளங்களில் கொந்தளிப்பை ஏற்படுத்தி இருந்தாலும் அவர்களின் பெற்றோருக்கு மிகப்பெரிய அவமானத்தையே இந்த வீடியோக்கள் தேடித் தந்துள்ளன. பெற்றோரின் விருப்பப்படியோ அல்லது கட்டாயத்தின் பேரிலோ ஆசிரமங்களில் சீடர்கள் அடைபட்டு விடுகின்றனர். பக்தியின் காரணமாக அவர்களே வந்து தஞ்சமடைந்துவிட்டார்கள் என்று அவர்களின் "மாஸ்டர்கள்" இதற்கு காரணங்களைச் சொல்கின்றனர். ஆசிரமத்திற்குள் போன தங்களின் பிள்ளைகளை மீட்கப் போராடி தோற்ற கதைகளும் இருக்கிறது. தங்களது பிள்ளைகள் இறை பணி தான் செய்கிறார்கள், அதனால் அவர்கள் போக்கிலேயே விட்டுவிடலாம் என்று நினைத்திருந்த பெற்றோர் வயிற்றிலும் புளியை கரைத்துள்ளது ஆண்டாள் விவகாரத்தில் வெளியாகியுள்ள பெண் சீடர்களின் பகீர் வீடியோக்கள். ஆண்டாளை எப்படி இழிவாக பேசலாம் என்று இவர்கள் ஆதங்கப்படுவதாக வைத்துக் கொண்டாலும், இவ்வளவு தரம் தாழ்ந்த கீழ்த்தரமான வார்த்தைகள் தான் அவர்களுக்கான இறை பணியாக ஆசிரமங்களில் கற்றுத் தரப்படுகின்றனவா என்ற கேள்வி எழுகிறது.

இப்போது தான் பூஜை முடித்து விட்டு வந்தேன், காலையிலேயே வைரமுத்துவிற்கு ஒரு வீடியோவை பதிவிடுகிறேன் என்று இளம் பெண் சீடர் ஒருவர் வெளியிட்ட வீடியோ அத்தனை நாராசம். பார்க்க நாகரிமாக வாழ்ந்து நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண் போல காட்சியளிக்கும் அந்த இளம் பெண் பேசும் பேச்சுகளை வைத்து கெட்ட வார்த்தைகளுக்கென தனி அகராதியே போட்டுவிடலாம் போல அந்த அளவிற்கு ஆபாச பேச்சுகள்.


Rubbish speeches of girl dieties ashamed their parents, social media viral vulnerable videos of the girl dieties not only worried the society but also the parents about their future.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS