ஜல்லிக்கட்டு போராட்டம் போல் உருமாறும் பஸ் கட்டண உயர்வு எதிர்ப்பு போராட்டம்- வீடியோ

Oneindia Tamil 2018-01-25

Views 6

தமிழகம் முழுவதும் பஸ் கட்டண உயர்வை கண்டித்து மாணவர்கள் நடத்தி வரும் போராட்டம், ஜல்லிக்கட்டுக்காக வெடித்த புரட்சி போல் வீரியம் அடையும் அளவுக்கு தீவிரமடைந்து வருகிறது. பொங்கல் பண்டிகை கொண்டாடப்படுவதற்கு முன்னர் ஊதிய உயர்வு, ஓய்வூதியர்களுக்கான நிலுவைத் தொகை கோரி போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து இன்றி தமிழகமே ஸ்தம்பித்தது.

இந்நிலையில் நீதிமன்றம் தலையிட்டு இந்த விவகாரத்தை தீர்த்து வைத்தது. இதையடுத்து பேருந்துகள் வழக்கம் போல் இயங்கின. பொங்கல் பண்டிகைக்கு பல்வேறு குளறுபடிகளுக்கு மத்தியில் மக்கள் ஊருக்கு சென்றுவிட்டு திரும்பினர்

இந்நிலையில் கடந்த வாரம் இரவு பேருந்து கட்டணத்தை உயர்த்துவதாக தமிழக அரசு திடீரென ஒரு அறிவிப்பை வெளியிட்டது. பின்னர் அடுத்த நாள் முதற்கொண்டு இந்த புதிய கட்டணத்தை அமல்படுத்தியது. இதற்கு தமிழகம் முழுவதும் எதிர்ப்பு கிளம்பியது.

Students conducting protests in Tamilnadu gets intensified. It seems that it will become Jallikattu Marina protest.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS