பஸ் பாஸ் கட்டண உயர்வு..மக்கள் அதிருப்தி- வீடியோ

Oneindia Tamil 2018-02-06

Views 1.3K

சென்னை மாநகர அரசு பேருந்துகளில் பயணம் செய்வதற்கான மாதாந்திர பாஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தமிழக அரசு பேருந்து கட்டணத்தை ஒரேயடியாக உயர்த்தி மக்களின் அதிருப்திக்கு ஆளாகியுள்ளது. பேருந்து கட்டணம் குறித்து எடப்பாடி பழனிசாமி அரசை நெட்டிசன்ஸ் கடுமையாக விமர்சித்து வருகிறார்கள்.
இந்நிலையில் சென்னை மாநகர அரசு பேருந்துகளில் பயணம் செய்வதற்கான மாதாந்திர பாஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது. தற்போது ரூ.1,000 ஆக இருக்கும் மாதாந்திர பாஸ் ரூ. 1,300 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. மேலும் ஒரு நாள் பயணம் செய்வதற்கான பாஸ்(டெய்லி பாஸ்) ரூ. 50ல் இருந்து ரூ. 80 ஆக உயர்த்தப்பட்டுள்ளது. இந்த புதிய பாஸ்களை வரும் 14ம் தேதி முதல் பெறலாம் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. பஸ் பாஸ் கட்டணம் உயர்த்தப்பட்டுள்ளது சென்னைவாசிகளை கொதிப்படைய செய்துள்ளது.



TN government has increased the bus pass fare for the buses plying in Chennai. People have to spend more to get monthly and daily passes. Bus fare hike is taking a toll on the commoners.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS