காவிரி விவகாரத்தில் சட்டத்தை ஏற்காத கர்நாடகா- வீடியோ

Oneindia Tamil 2018-02-06

Views 1

காவிரி நீரை பங்கிட்டு கொள்ள உச்சநீதிமன்றம் விதித்த தீர்ப்புகளையும் தங்களுக்கே தண்ணீர் பஞ்சம் இருப்பதை காரணம் காட்டி கர்நாடகா தட்டிக் கழிப்பது நியாயமா? அரசியல் காரணங்கள், மொழி பாகுபாடு இவற்றை கடந்து நாம் எல்லாம் இந்திய மக்கள் என்ற எண்ணம் வந்தால் ஒழிய காவிரி நீர் பங்கீட்டு விவகாரத்தில் தமிழக மக்களையும் கர்நாடகா மனிதர்களாக நினைத்து சட்டப்படியும் நியாயப்படியும் நடந்து கொள்ளும் என்றே தோன்றுகிறது.

நமக்கே தண்ணீர் இல்லை பிறகெப்படி தமிழகத்திற்கு தண்ணீர் கொடுப்பது காவிரி நீரை பகிர்ந்து கொள்வதற்கு கர்நாடகா கூறி வரும் காரணம். கடந்த ஆண்டுகளிலாவது பருவமழை இல்லாததால் தமிழகம், கர்நாடகா உள்ளிட்ட பகுதிகள் வறட்சியை சந்தித்தன. அப்போதும் கர்நாடகாவில் விவசாயத்திற்கு அந்த அளவில் பாதிப்பில்லை, ஆனால் தமிழகத்திலோ காவிரி நீர் வரும் அல்லது மழையாவது கை கொடுக்கும் என்று நம்பி பயிரிட்ட விவசாயிகள் அதுவும் கைகொடுக்காததால் வயலில் காய்ந்து கருகிய பயிர்களைக் கண்டு மனம் உடைந்து வயல்வெளியிலேயே தற்கொலை செய்து கொண்டனர்.

Is Karnataka's slogan Water for me first and then for anyone else is corrrect, how to resolve the cauvery water sharing dispute as it is continuing years long.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS