உத்தரகண்ட் முதல்வர் கடந்த 10 மாதங்களில் டீ மற்றும் ஸ்நாக்ஸுக்கு ரூ. 68 லட்சம் செலவு செய்துள்ளது தெரிய வந்துள்ளது. செலவை குறைக்க நடவடிக்கை எடுப்பதாகக் கூறிவிட்டு இப்படி செய்துள்ளார்கள். பாஜகவை சேர்ந்த திரிவேந்திர சிங் ராவத் கடந்த ஆண்டு மார்ச் மாதம் 18ம் தேதி உத்தரகண்ட் மாநில முதல்வராக பதவியேற்றுக் கொண்டார். இந்நிலையில் ஹேமந்த் சிங் என்பவர் தகவல் அறியும் உரிமை சட்டம் மூலம் ராவத்தின் டீ, ஸ்நாக்ஸ் செலவு கணக்கை கேட்டிருந்தார். அவருக்கு கூடுதல் செயலாளர் வினோத் ரத்தூரி அனுப்பியுள்ள பதில் கடிதத்தில் உள்ள தகவல் மக்களை அதிர்ச்சி அடைய வைத்துள்ளது.
கடந்த 10 மாதங்களில் டீ மற்றும் ஸ்நாக்ஸுக்கு முதல்வர் திரிவேந்திர சிங் ராவத் ரூ. 68 லட்சத்து 59 ஆயிரத்து 865 செலவு செய்துள்ளார். ராவத் டீ மற்றும் ஸ்நாக்ஸுக்கு மட்டும் தினமும் ரூ. 22 ஆயிரம் செலவு செய்துள்ளார். அவர் தினமும் 150 முதல் 200 பேரை சந்தித்துள்ளார். ஆனால் இந்த தகவலை ஏற்க முதல்வர் அலுவலகம் மறுத்துள்ளது.
Uttarakhand chief minister Bharatiya Janata Party (BJP)’s Trivendra Singh Rawat has spent Rs. 68 lakh on tea and snacks in 10 months since he took charge last March. This information is revealed through an RTI query.