சமந்தா ரசிகர்கள் மீது போலீஸ் தடியடி.

Filmibeat Tamil 2018-02-12

Views 702

சமந்தாவிற்கு பெரிய ரசிகர் கூட்டம் இருப்பது அனைவருக்கும் தெரிந்த விஷயம்தான். அவர் நேற்று கிருஷ்ணகிரியில் ஒரு புதிய நகைக்கடை திறப்பு விழாவிற்காக வந்திருந்தார். சமந்தாவை பார்ப்பதற்காக ஆயிரக்கணக்கான ரசிகர்கள் அங்கு குவிந்திருந்தனர். அப்போது கூட்டத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டதால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். அதனால் அந்த இடத்தில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. பிறகு, நகைக்கடையைத் திறந்து வைத்தார் சமந்தா. தமிழ், தெலுங்கு மொழிகளில் முன்னணி நடிகையாக வலம்வருபவர் நடிகை சமந்தா. இவர் தற்போது, சுகுமார் இயக்கத்தில் ராம்சரண் கதாநாயகனாக நடிக்கும் படம் 'ரங்கஸ்தலம்' திரைப்படத்தில் நடித்துள்ளார். ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியிருக்கும் இப்படம் விரைவில் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் நடிகை சமந்தா, நேற்று கிருஷ்ணகிரி - பெங்களூரு சாலையில், வெங்கடேஸ்வரா நகைக்கடை திறப்பு விழாவில் பங்கேற்றுள்ளார். காலை 10 மணிக்கு வருகைதரவிருந்த சமந்தாவை காண 8 மணிக்கே ரசிகர்கள் கூட்டம் கூடியது. 10 மணிக்கு காரில் வந்த நடிகை சமந்தாவை, போலீஸ் பாதுகாப்பை மீறி, ரசிகர்கள் சூழ்ந்து கொண்டதால், அவரால் காரை விட்டு இறங்க முடியவில்லை. இதனால் போலீசார் தடியடி நடத்தி கூட்டத்தைக் கலைத்தனர். சாலையின் நாலாபுறமும் இளைஞர்கள் சிதறி ஓடினர். இதனால், அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் நகைக் கடை திறப்பு விழா நடந்தது.

Samantha has a big fan base and everyone knows it. SHe had arrived in Krishnagiri for a new jewellery opening ceremony yesterday. Thousands of fans were came there to see Samantha. At that time, the police were beaten fans and dissolved the crowd.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS