அதிமுகவை வழி நடத்த டிடிவி தினகரனாலும், சசிகலாவினால் மட்டுமே முடியும் என்று கள்ளக்குறிச்சி அதிமுக எம்எல்ஏ பிரபு கூறியுள்ளார். டிடிவி தினகரனுக்கு ஆதரவாக இருந்த 18 எம்எல்ஏக்கள் தகுதி நீக்கம் செய்யப்பட்டுள்ளனர். இந்த நிலையில் கள்ளக்குறிச்சி எம்எல்ஏ பிரபு இன்று பெசன்ட் நகரில் உள்ள டிடிவி தினகரன் வீட்டிற்கு சென்று அவருக்கு பூங்கொத்து கொடுத்து தனது ஆதரவை தெரிவித்தார்.