இன்றைய பரபரப்பான காலத்தில் ஒரே இடத்தில் அமர்ந்து வேலை செய்யும் சூழ்நிலையில் நாம் உள்ளோம். இதனால் உடலுக்கு வேண்டிய உழைப்பு கிடைக்காமல், உண்ணும் உணவுகளில் உள்ள கொழுப்புக்கள் அப்படியே உடலினுள் தங்கிவிடுகிறது. இதன் விளைவாக பலருக்கும் அசிங்கமாக பானைப் போன்று தொப்பை தொங்கிக் கொண்டிருக்கிறது. குறிப்பாக திருமணமாவதற்கு முன்பே பல ஆண்கள் தொப்பையை பரிசாக பெற்று, வயதான தோற்றத்தைப் பெறுகின்றனர். பெண்களுக்கு தொப்பை இருந்தால், அவ்வளவு அசிங்கமாக தெரியாது. ஆனால் ஆண்களுக்கு என்றால் நன்கு தெரியும். இப்படி அசிங்கமாக இருக்கும் தொப்பையைக் கரைக்கவும், இனிமேல் தொப்பை வராமலும் இருக்க வேண்டுமென்றால், அன்றாடம் உடற்பயிற்சி மேற்கொள்ள வேண்டும். பல ஆண்கள் மற்றும் பெண்கள் தங்களது தொப்பையைக் கரைத்து, தட்டையான வயிற்றைப் பெறுவதற்கு ஜிம்மில் சேர்ந்து, உடற்பயிற்சிகளை செய்து வருகின்றனர். ஆனால் வெறும் உடற்பயிற்சி மட்டும் ஒருவரது தொப்பையைக் குறைக்காது. அத்துடன் உடலின் மெட்டபாலிசத்தை அதிகரித்து கலோரிகளை எடுக்க உதவும் பானங்கள் மற்றும் உணவுப் பொருட்களையும் சேர்க்க வேண்டும்.
அதில் தொப்பையைக் கரைத்து தட்டையான வயிற்றைப் பெற உதவும் ஓர் அற்புதமான பானம் தான் எலுமிச்சை இஞ்சி பானம். இதை ஒருவர் அன்றாடம் குடித்து வந்தால், விரைவில் தட்டையான வயிற்றைப் பெறலாம். சரி, இப்போது இஞ்சி எலுமிச்சை பானத்தின் நன்மைகளையும், அந்த பானத்தை எப்படி தயாரிப்பது என்றும் காண்போம்.
There are a lot of abs exercises that are recommended for a flat belly but lemon ginger flat belly drink can accelerate the process! Read on to know more...