தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் சிலையில் மாற்றம் செய்யும் முன்னால், அமைச்சர்களை மாற்ற வேண்டும் என்று லட்சிய தி.மு.க கட்சியின் தலைவரும், நடிகருமான, டி.ராஜேந்தர் காட்டமாக தெரிவித்தார். லட்சிய தி.முக. தலைவர் டி.ராஜேந்தர் சமீபத்தில் அளித்த பேட்டியொன்றில் வரும் 28ம் தேதி, எனது அரசியல் வாழ்க்கையில் முக்கியமான முடிவை அறிவிக்க உள்ளேன் என்று தெரிவித்தார்.