அனைத்திந்திய அண்ணா திராவிட முன்னேற்றக் கழகத்தின் கூட்டணிக் கட்சிகளின் செயல்வீரர்கள் கூட்டம் விராலிமலையில் நடைபெற்றது.
கூட்டத்தில் கரூர் பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் தம்பிதுரை, விராலிமலை சட்டமன்ற உறுப்பினரும் தமிழக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் கலந்துகொண்டனர்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய தம்பிதுரை
அதிமுக தலைவர் ஜெயலலிதா அவர்களின் இந்த மறைவுக்கு காங்கிரஸ் திமுக தான் காரணம் என்றும் மனதளவில் அம்மாவின் மனதை கெடுக்க செய்தவர்கள் இவர்கள்தான் என்றும் பொய்யான வழக்குகளை தொடர்ந்து அந்த வழக்குகளை தமிழ்நாட்டில் நடத்தினால் நியாயம் கிடையாது என்பதற்காக காங்கிரஸ் ஆட்சி செய்யும் கர்நாடகவுக்கு இந்த வழக்கை மாற்றியது திமுக தலைவர் கருணா நீதி தான் என்றும் இதில் காங்கிரஸுக்கும் பங்கு உண்டு என்றும் ஜெயலலிதாவின் மரணத்திற்கு காங்கிரஸ் கட்சியும் திமுகவும் தான் காரணம் என பகிரங்கமாக குற்றச்சாட்டை முன் மொழிந்தார்.
des: Congress DMK is the reason for Jayalalithaa's demise Brotherhood