'காலா' டீசர் லீக் ஆனதா?- வீடியோ

Filmibeat Tamil 2018-02-28

Views 13.8K

பா.ரஞ்சித் இயக்கத்தில் ரஜினிகாந்த் நடித்திருக்கும் 'காலா' திரைப்படம் வரும் ஏப்ரல் 27-ம் தேதி ரிலீஸ் ஆகும் என்று அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் 'காலா' படத்தின் டீசர் மார்ச் மாதம் 1-ம் தேதி வெளியாவதாக இப்படத்தின் தயாரிப்பாளர் தனுஷ் ட்விட்டரில் அறிவித்திருந்தார். இந்நிலையில், 'காலா' படத்தின் 30 விநாடிகள் ஓடும் டீசர் என ஒரு வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது. தனுஷின் வுண்டர்பார் பிலிம்ஸ் தயாரிக்க, லைகா நிறுவனம் வெளியிடும் இந்தப் படத்தில், நானா படேகர், சமுத்திரக்கனி, 'வத்திக்குச்சி' திலீபன், ரமேஷ் திலக், மணிகண்டன், ஹுமா குரேஷி, அஞ்சலி பட்டேல், சாக்ஷி அகர்வால் மற்றும் பலர் நடித்துள்ளனர். ரஜினிகாந்த்தின் 'காலா' படத்தின் டீசர் ரிலீஸ் தேதி சமீபத்தில் அறிவிக்கப்பட்டது. மார்ச் 1-ம் தேதி டீசர் வெளியிடப்படும் என தனுஷின் ட்விட்டர் பக்கத்தில் அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியானது.
காலா டீசருக்காக, ரசிகர்கள் காத்திருக்கும் நிலையில், தற்போது 30 விநாகள் டீசர் லீக் ஆகி சமூக வலைத்தளத்தில் வைரலாகியுள்ளது. இந்த டீசரில் ரஜினி முகம் காட்டப்படவில்லை. இது போலியானது என சிலர் கூறிவந்தாலும், டீசர் உண்மையானது போலவே நேர்த்தியாக இருக்கிறது.

Rajinikanth starrer 'Kaala' will be released on April 27. Dhanush announced on Twitter that the teaser of 'Kaala' will be released on March 1. In this case, a video that is 30 seconds teaser of 'kaala' is goes viral on social networks.

Share This Video


Download

  
Report form
RELATED VIDEOS